• Apr 16 2026

இவன் ஸ்வேதாவோட புருஷன்; என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டான்! தாமரைச்செல்வி கண்ணீர் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் நடிகை ஸ்வேதா. இவரை உதவி இயக்குனரான ஆதி திருமணம் செய்துள்ளதாக வெளியான தகவல்களை ஸ்வேதா மறுத்து இருந்தார். ஆனாலும் யாருன்னு தெரியாதுன்னு சொன்ன ஸ்வேதா தான் விவாகரத்து மனு அனுப்பி இருப்பதாக இயக்குனர் ஆதி பேட்டி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், சின்ன மருமகள் சீரியலில் இருந்து நடித்து சமீபத்தில் வெளியேறிய நடிகை தாமரைச்செல்வி, ஸ்வேதாவின் கணவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

அதன்படி தாமரைச்செல்வி தெரிவிக்கையில், ஸ்வேதாவின் கணவர் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக என்னிடம் உதவி கேட்டார். நானும் என்னுடைய மூன்று சவர நகையை வைத்து பணத்தை கொடுத்தேன். அவருடைய பெயரில் தான் நகையை வைத்து பணம் கொடுத்தேன். 


அதற்கு காரணம் எங்கட ஏரியால நகையை வச்சா கம்மி பணம் தான் கிடைக்கும். எனக்கு தெரிஞ்ச இடத்துல நகை வச்சா அதிக பணம் கிடைக்கும் என்று சொல்லி அவரோட ஏரியாக்கு கூட்டிப் போய், அவன் சொன்ன கடையில தான் நகையை வச்சு பணத்தை வாங்கி கொடுத்தோம்.

ஆனா அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். அந்த நகையை மீட்டு அதனை விற்று பெண்கள் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் காசு கொடுக்கின்றார். அந்த வீடியோவை பார்க்க எனக்கு வயிறு எரியுது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் உழைச்சி இந்த நிலைக்கு வந்து இருக்கேன். ஒருத்தருக்கு உதவி செய்ய நினைச்சேன். ஆனா அவர் என்ன ஏமாத்திட்டான்.

இப்போ என்னால நிம்மதியா வாழ முடியல. ஷூட்டிங் போக முடியல. நான் அதிக அளவு மன உளைச்சலில் இருக்கின்றேன். அவன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் போட்டு இருக்கின்றேன். நான் வீடியோ போட காரணமே எனி அவன நம்பி யாரும் ஏமாறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement