தமிழ் சினிமாவில் தனக்கென தனிச்சிறப்புடன் பணியாற்றும் நடிகராக இருப்பவர் சசிகுமார். குடும்பம், மனித உறவுகள் மற்றும் எளிய வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தற்போது நடித்துள்ள ‘டூரிஸ்ட் பாமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் சர்வதேச தமிழ் ரசிகர்களிடையே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கின்றது. இன்று வெளியான அதிகாரபூர்வ தகவலின்படி, ‘டூரிஸ்ட் பாமிலி’ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ. 2.3 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. குறைந்தளவு பட்ஜெட்டில் உருவான குடும்பத் திரைப்படத்திற்கு கிடைத்த மிகச்சிறப்பான சாதனை எனவே இதனை ரசிகர்கள் கருதுகின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பல இடங்களில் இருக்கும் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் வரவேற்றுள்ளனர். ‘டூரிஸ்ட் பாமிலி’ என்பது வெறும் கதாப்பாத்திரங்களின் பயணத்தை மட்டுமல்ல, ஒரு குடும்ப உறவுக்குள் நடக்கும் சிக்கல்கள், மனித உணர்வுகள், அன்பு என்பவற்றை அழுத்தமாக காட்சிப்படுத்தும் படம்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் குடும்பம் சார்ந்த, தரமான படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டூரிஸ்ட் பாமிலியின் வாயிலாக, ஒரு மாறுபட்ட வணிக வெற்றி சசிகுமாருக்கு கிடைத்திருக்கின்றது என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Listen News!