சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வர, டிராபிக் அதிகாரி இப்போது தப்பிவிட்டாய்.. என்றைக்காவது ஒரு நாள் வசமாக மாட்டுவா என்று முத்துவுக்குசொல்லுகின்றார்.
அதன் பின்பு அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் மனோஜ் அடிவாங்கிய காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றார் முத்து. மேலும் மீனாவிடம் சொல்ல, மீனாவும் சிரிக்கின்றார். அதன் பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தாத்தா பாட்டியை பார்ப்பதற்காக செல்ல, அங்கு தாத்தா, பாட்டியின் உறவினர் ஒருவர் அவர்களை கவனிக்கின்றார்.
d_i_a
இதன்போது முத்து மீனாவுக்கு நன்றி சொல்லி தான் தாத்தா பாட்டியை இவ்வளவு நாளும் தேடிக் கொண்டிருந்ததாகவும், இறுதியில் உங்களுடைய விளம்பரத்தை பார்த்து தான் அவர்களை கண்டுபிடித்ததாகவும், இனிமேல் அவர்களை என்னுடனே வைத்து பார்க்கின்றேன் ஊருக்கு கூட்டிச் செல்கின்றேன் என்று சொல்லுகின்றார். இதனால் முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுகிறார்கள்.
அந்த நேரத்தில் தாத்தா தன்னிடம் இருந்த போனை முத்துவிடம் கொடுத்து இது ஒரு பொண்ணு விட்டுட்டு போயிட்டா.. அந்த பொண்ண தேடி கண்டுபிடிச்சு கொடுக்குமாறு சொல்லுகின்றார். முத்துவும் சரி என அந்த போனை வாங்கி வைத்து விட்டு வருகின்றார்.
வீட்டுக்கு வந்த முத்து ஸ்டேஷனில் நடந்ததை சொல்லியதோடு மனோஜ் அங்கு வந்தான்.. ஆனால் எல்லாரிடமும் மாறி மாறி அடி வாங்கினான் என்று அண்ணாமலையின் காதில் விஷயத்தை சொல்ல, அண்ணாமலையும் மனோஜை கூப்பிட்டு பளார் என அறைக்கின்றார். இதனால் என்ன விஷயம் என்று விஜயா கேட்க, சொல்லக்கூடிய விஷயமாக இருந்தால் சொல்லுவேன் தானே என்று அண்ணாமலை சொல்ல மறுக்கின்றார்.
இதை தொடர்ந்து மீனா அந்த போனை எடுத்து பார்க்க இது உங்களுடைய போன் போல இருக்குது என்று சொல்ல, அதனை ஆன் பண்ணி பார்க்கும் போது முத்து மீனாவின் புகைப்படம் காணப்படுகிறது . இதனால் தனது போன் மீண்டும் கிடைத்து விட்டதாக அண்ணாமலையிடம் சொல்லி சந்தோஷப்படுகின்றார் முத்து. இதை கேட்டு ரோகிணி கடும் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியாக வித்யா வீட்டுக்கு போன ரோகிணி போனை எங்க போட்டா? கடலில் தான் போட்டியா? ஏன் இப்படி என்கிட்ட பொய் சொல்லுகிறாய்? என்று வித்தியாவை சரமாரியாக கிழிக்கின்றார்.
இறுதியில் கோபப்பட்ட வித்தியா, நீ ஆயிரம் பொய் சொல்லுவாய்.. அது எல்லாத்துக்கும் நான் சப்போர்ட் பண்ணனுமா? இப்ப நான் உனக்கு பிரண்டா தெரியலையா? என்று இரண்டு பேருக்கு இடையிலும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!