• May 20 2024

சங்கீதாவின் தங்கையை பார்த்திருக்கின்றீர்களா..? விஜய்யை எங்கு போய் சந்தித்திருக்கின்றார் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வெற்றி வாகை சூடி வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிய இவர் அன்றிலிருந்து இன்றுவரை முன்னணி நடிகர்களில் ஒருவராகவே வலம் வருகின்றார். சினிமாவில் அறிமுகமாகி இற்றைக்கு 65 படங்களில் நடித்து முடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் உருவான படங்களில் அதிகமான படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றன. 



இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய 66 ஆவது படமான 'வாரிசு' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வம்சி இயக்கியிருப்பதோடு இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றது. இப்பபடத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 67' இல் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உடைய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சினிமாவைத் தாண்டி விஜய்க்கு ஒரு அழகான குடும்பமும் இருக்கின்றது. இவர் 1999-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்யின் திருமணத்தில் எடுக்கப்பட்ட சங்கீதாவின் தாய், தந்தை இருவரினதும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.



இதனை தொடர்ந்து மற்றுமோர் முக்கிய நபரின் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. அதாவது சங்கீதாவிற்கு ஒரு தங்கை இருக்கிறாராம். சங்கீதா மற்றும் அவர் தங்கை ஆகியோர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமே தற்போது வெளியாகி உள்ளது. மேலும் விஜய்யை காண சங்கீதாவும், அவருடைய தங்கையும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்றபோது இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.



Advertisement

Advertisement