• Sep 19 2024

மக்களோடு மக்களாக பேருந்தில் நின்றபடி பயணித்த அஜித் - தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துவிடும்.

தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தில் நடித்து நடித்து வருகின்றார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித்.

தமிழ் திரையுலகில் சினிமா பின்புலம் இன்றி தன்னம்பிக்கையால் உயர்ந்த நாயகன் என்றால் அது அஜித் தான். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்க விரும்புபவர் அஜித். இதன் காரணமாகவே இவர் எந்த ஒரு சோசியல் மீடியாவையும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவர்மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு குறைந்தபாடில்லை.

அத்தோடு சமீபகாலமாக நடிகர் அஜித் எங்கு சென்றாலும் அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி விடுகின்றன. 

அந்த வகையில் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டிணம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித்.



Advertisement

Advertisement