• Dec 04 2024

ரெஸ்டாரெண்டுக்கு வந்து பிரச்சினை பண்ணும் கஷ்ட்டமர்ஷ்! பணம் இல்லாமல் தடுமாறும் பாக்கியா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியா பிரச்சினையை சரி செய்வதற்காக தனது நகைகளை அடகு வைக்கிறார். எழில் இந்த படம் போதுமா என கேட்க இது போதாது இன்னும் 5 லட்சம் வேண்டும் என்று சொல்கிறார். தன்னிடம் ஐடியா இருக்கிறது வா என்று எழிலை அழைத்து செல்கிறார். பின்னர் ஒரு பைனான்ஸ் தொழிலதிபரிடம் சென்று தனது நிலைமையை சொல்லி பணம் கேட்கிறார்.


அவர் தற்போது பைனான்ஸ் செய்வதனால் தனக்கு பிரச்சினை வருகிறது அதனால் அதனை செய்வது இல்லை என்று சொல்கிறார். பின்னர் நீங்க நம்பிக்கைக்கு உரியவர் உங்களுக்கு நான் கடனா தாரன் கொஞ்சம் கொஞ்சமா கட்டுங்க என்று சொல்ல பாக்கியா மகிழ்ச்சியோடு நன்றி கூறுகிறார். 


பாக்கியாவிற்கு பணம் தருமாறு தொடர்ந்து கால் வருகிறது ஜெனி-எழில் இருவரும் ஒன்லைனில் அவர்களுக்கான பணத்தினை அனுப்புகின்றனர். பாக்கியவிடம் தற்போது இருக்கும் பணத்தினை வைத்து 500 பேருக்கு தான் பணம் அனுப்ப முடியும் என்று சொல்கிறார் ஜெனி.  அப்போது பாக்கியாவிற்கு அவசரமாக கால் வரவே உடனே செல்கிறார். ஜெனி செழியனுக்கு கால் செய்து ஆண்டிக்கு பணம் கொடுக்கணும் எதாவது யோசிச்சீங்களா என்று கேட்ட. செழியன் அப்பவே சொன்னன் சின்னதா செய்ங்கனு பெருசா ஆரம்பிச்சி இப்ப பிரச்சினைல இருக்காங்க. சரி  உதவி செய்வாம் என்று சொல்கிறார். 


கோபிக்கு கால் பண்ணி அம்மாவுக்கு பணம் கொடுக்கணும் என்று சொல்கிறார். கோபி செழியனை அங்கு போகவிடாமல் தனது கடைக்கு வருமாறு சொல்கிறார். பிஸ்னஸ் சம்மந்தமே கதைக்கணும் என்று சொல்கிறார். பாக்கியா தனது ரெஸ்டூரன்சுக்கு செல்கிறார் அங்கு கூட்டமாக ஆட்கள் நிக்கிறார்கள். எங்க பணம் எங்க தாங்கனு சொல்லுறாங்க அப்போ எல்லாருக்கும் பணம் வந்துரும் என்று பாக்கியா சொல்கிறார்.  எல்லோரும் விடாப்பிடியாக பணம் தருமாறு சண்டை போடுகிறார்கள். 

 

எழில் பழனிசாமி சார கூட்டிட்டு வாரத்துக்கு போகிறார். அவர் மீட்டிங்கில் இருப்பதால் கால் எடுக்கவில்லை. பாக்கியா மீண்டும் ட்ரை செய்கிறார் அவர் எடுக்கவில்லை.  நாங்க இங்க இருக்கிறோம் எங்களுக்கு பணம் தராமல் மத்தவங்களுக்கு அனுப்பி இருக்கீங்க என்று சொல்லி நாங்க பணம் தந்தா போவோம் இல்லனா இங்கையே உக்காந்து இருப்போம் என்று பிரச்சினை செய்கின்றனர். இதனை தீர்க்க முடியாமல் பாக்கியா புலம்பி கொண்டு இருக்கிறார். 


Advertisement

Advertisement