• Jul 19 2024

எச் வினோத் அடுத்த படமும் டிரப்பா? தளபதி விஜய் கொடுத்த ஷாக்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது படத்தின் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடைசியாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்த படத்தை இயக்குனராக ஒப்பந்தமாகி இருக்கும் எச் வினோத் அவர்களுக்கு கூட பெரும் ஷாக்காக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 69’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும், விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை அதிரடி ஆக்சன், அரசியல்  கலந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்த ஒரு சில குழப்பமான தகவல்கள் வெளிவந்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கா விட்டால் விஜய்யே இந்த படத்தை தயாரிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’தளபதி 69’ படத்தையே விஜய் டிராப் செய்ய சொல்லி விட்டதாகவும் அரசியல் பணிகள் அதிகமாக இருப்பதால் ’கோட்’ படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்கலாம் என்று அவர் திட்டமிடப்பட்டுள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதமே சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்துவிடும் என்பதால் இன்னும் முழுமையாக இரண்டு வருடங்கள் கூட இல்லை. இந்த நேரத்தில் ’தளபதி 69’படத்தை தொடங்கினால் அந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்து விடும். அதன் பிறகு தேர்தலை சந்திக்க மிகவும் குறைவான காலம் இருப்பதால் அது அரசியல் என்ட்ரிக்கு சரியாக இருக்காது என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே ’கோட்’ படத்துடன் அவர் தனது சினிமா வாழ்க்கையை முடித்து விட்டு முழுநேர அரசியலில் இறங்க இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்காக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு மேல் காத்திருந்த எச் வினோத் தற்போது விஜய் படமாவது உறுதியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படமும் டிராப் என்று சொல்லப்படுவதை அடுத்து அவர் அதிருப்தியின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement