• Jul 05 2026

சூர்யாவின் 'கருப்பு' ஆட்டம் ஆரம்பம்.. - டிரெய்லர் எப்போது தெரியுமா? ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

கருப்பு திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. R. J. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், திரிஷா கதாநாயகியாக இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.


டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, ‘கருப்பு’ படத்தின் டிரெய்லர் முழுமையாக தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement