• Jan 19 2025

விஜய் போலவே சினிமாவை விட்டு விலகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி.. ஆனால் அரசியல் இல்லை.. அதுக்கும் மேல..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு அவர் சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் போலவே நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியும் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும்  வேறொரு துறையில் அவர் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’பிடி சார்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இதற்கு முன்னர் அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்பதால் இசையை மட்டும் கவனிக்கலாம் என்று சிலர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இசை, நடிப்பு இரண்டுமே எனக்கு வேண்டாம், சினிமாவை வீட்டை விலகப் போகிறேன் என்று கூறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, சமீபத்தில் பிஹெச் டி டாக்டர் பட்டம் முடித்துள்ளதை அடுத்து அவர் தனது தந்தையை போலவே கல்லூரி ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பதாகவும் ஆசிரியர் பணியில் தனது சேவையை தொடங்கி நல்ல மாணவர்களை உருவாக்கி, ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

பணம் கொழிக்கும் சினிமா துறையை விட்டு விட்டு சேவை மனப்பான்மையுடன் ஆசிரியர் தொழிலுக்கு செல்ல ஹிப் ஹாப் தமிழா ஆதி முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement