• Jan 18 2025

’மகாராஜா’ சுமாரான படம்.. ஃபேக் பாசிட்டிவ் விமர்சனங்கள்.. விஜய் தான் காரணமா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படத்திற்கு சொல்லி வைத்தால் போல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும், யூடியூப் விமர்சகர்களும், ட்விட்டர் பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோலிவுட்டின் பிரபலம் ஒருவர் ’மகாராஜா’ திரைப்படம் மிகவும் சுமாரான படம்தான், ஆனால் இந்த படத்தை வேண்டும் என்றே ஃபேக் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து உள்ளார்கள் என்று குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷ் என்பதும் இவர் தளபதி விஜய்யின் மேனேஜராகவும் அவரது சமூக வலைதளங்களுக்கு அட்மின் ஆகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தான் அனைத்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள், ட்விட்டர் பிரபலங்களிடம் இந்த படத்திற்கு பாசிட்டிவ் வசனம் எழுத சொன்னதாகவும் இதற்காக ஒரு பெரிய அளவு பணம் செலவழிக்கப்பட்டதாகவும் கோலிவுட் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதனை அடுத்து முழுக்க முழுக்க இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவி வருவதாகவும் ஆனால் உண்மையில் இந்த படம் சுமாரான படம் தான் என்றும் அனைவரும் போற்றி கொண்டாடும் அளவுக்கு நல்ல படம் இல்லை என்றும் அந்த பிரமுகர் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாமே ’மகாராஜா’ படம் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement