• May 20 2024

ஜி.வி. பிரகாஷின் அடியே படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்: வெளியானது அறிவிப்பு

sarmiya / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட நடிகரும் இசையம்பாளருமான  ஜி.வி. பிரகாஷ் தனது 17ஆவது வயதில் வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிள்கு  இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவரது திறமைால் ரசிகர்கர் கூட்டமே அவரை கொண்டாடியது.

இசையமைப்பில் ஹிட் ஆன ஜி.வி. பிரகாஷ்
நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு சரியான அங்கீகாரத்தையோ அல்லது நல்ல நடிகன் என்ற அடையாளத்தையோ பெற்று தரவில்லை. தொடரந்தும் சர்வம் தாளமயம், 
நாச்சியார், சிவப்புமஞ்சள் பச்சை , பேச்சிலர் ஹிட்டாக இருந்தது அவரது விடாமுயற்சியால் அவர் நடித்த படங்கள் அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியதோடு ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியது.


இந்தச் சூழலில் அவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அடியே படம் வெளியானது. . இந்தப் படத்துக்கு ஓரளவு மட்டுமே ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில் அடியோ படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது சோனி லிவ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கபப்ட்டிருக்கிறது.


சினிமா செய்திகளை மேலும் அறிந்திட

Advertisement

Advertisement