• May 19 2024

நம்ம சூப்பர் ஸ்ட்டாரா இது? யாரும் பார்த்திராத ரசிகர்களை வியக்க வைக்கும் புகைப்படங்கள்.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில்  சூப்பர் ஸ்ட்டார் யாரென்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்... என்ற பாடல் உண்மைதானுங்க ,
சின்ன குழந்தை கூட ரசித்து பார்கும் அளவுக்கு சிறந்த முறையிலே ஆக்டிங் கொடுப்பவர் தான் நம்ம சூப்பர் ஸ்ட்டார் ரஜினி.


இவர்1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.பின்னர்  ஒரு  பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு திபை்படம்  1976 இல்  அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து  புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவன் கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற நடித்தார் இத்  திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. இதனைத்தொடர்ந்து பாபா, நல்லவன், அண்ணாமலை, பாட்சா, படையப்பா என தொடர்ந்து  2010ஆம் ஆண்டு வெளிவந்த எந்திரன் சிறந்த வெற்றியை கொடுத்திருந்து.  


இவர் நடித்த  படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாகவே இருக்கும், நம்ம சூப்பர் ஸ்டார் தமிழ்  மொழியிலும்,தெலுங்கு, கிந்தி,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.


தற்போது அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஸ்ட்டாரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 








மேலும் சினிமா செய்திகளை அறிந்திட 

Advertisement

Advertisement