• Feb 01 2026

தமிழுக்கு துரோகம் செய்து விட்டு அர்ஜுன் பக்கம் சாய்ந்த கோதை- உண்மையை கண்டு பிடித்த கார்த்திக்- Thamizhum Saraswathiyum Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால் தமிழும் கார்த்திக்கும் குழப்பத்தில் இருக்கின்றனர் அத்தோடு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைப்பதற்கு கோதை தான் காரணம் என்ற விஷயமும் கார்த்திக்கிற்கு தெரிந்து விட்டது.

இதனால் கார்த்திக் வீட்டிற்கு வந்து கோதையிடம் அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைப்பதற்கு நீங்க தானே காரணம் என்று சொல்ல தமிழ் கார்த்திக்கை திட்டுகின்றார். அம்மா அப்பிடி தப்பு பண்ணியிருக்கமாட்டாங்க நியாயத்தின் பக்கம் தான் நடப்பார்.அம்மாவை தேவையில்லாமல் சந்தேகப்படாத என்று சொல்ல கோதை அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement