• May 21 2026

சபையில் அசிங்கப்பட்ட கோபி.. ஈஸ்வரி போட்ட அதிரடி கண்டிஷன்! அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ஈஸ்வரி - ராமமூர்த்தியின் சதாபிஷேகத்திற்கு கோபி வருகின்றார். கோபி வருவதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள்.

இதன் போது கோபி ராமமூர்த்தியிடம் அப்பா என அழைத்து தான் கொண்டுவந்த கிப்டை கொடுக்க முயல, யாருக்கு யார் அப்பா? என ராமமூர்த்தி திட்ட, ஈஸ்வரியும் நீ எங்க பையன் கிடையாது இது எங்க பொண்ணு பாக்கியா எங்களுக்காக செய்தது. நீ முதல் கிளம்பு என சொல்லுகின்றார்.


ஆனாலும் கோபி அதை பொருட்படுத்தாமல் மீண்டும் ராம மூர்த்திக்கு மேடையில் சென்று கிப்ட் கொடுக்க அவர் தட்டி விடுகின்றார். அத்துடன் ஈஸ்வரியும் நாங்க செத்தாலும் எங்களை பார்க்க வந்திடாத என கையெடுத்து கும்பிட்டு கோபியை வெளியே போகுமாறு துரத்துகிறார்.

இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இனி அடுத்து வரும் நாட்களில் கோபி என்ன செய்யப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement