• Oct 08 2024

நடுரோட்டில் வைத்து ஈஸ்வரியை அசிங்கப்படுத்திய கோபி! பாக்கியாவுக்கு பழனி கொடுத்த ஐடியா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ஈஸ்வரியிடம் பேசிய போதும் அவர் கணக்கெடுக்காத நிலையில், தான் உங்களை வெறுப்பது ஆகவும் உங்களை பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதாகவும் ஈஸ்வரி மீது வெறுப்பை கொட்டி தீர்க்கிறார் கோபி. நீங்க செய்தது நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று கண்டபடி திட்டுகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் நடந்தவற்றை சொன்னதோடு இனி எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் பாக்கியவை பழி வாங்காமல் விடமாட்டேன். எனது ஒரே குறிக்கோள் அவளை பழிவாங்குவது தான் என்று சொல்லுகின்றார். ஆனாலும் ராதிகா யாரையும் எதுவும் செய்ய வேண்டாம் நாம் நமது வேலையை பார்த்து சந்தோஷமாக இருப்போம் என்று சொல்லுகின்றார்.

அதன் பின்பு பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டு இருக்க, அங்க பழனிச்சாமி வருகின்றார். மேலும் நீங்கள் ஒரு செப்பை வைத்து வேலை செய்யலாம் தானே ஐடியா கொடுக்க பாக்யாவும் அதற்கு ஒத்துக்கொள்ளுகின்றார்.


இன்னொரு பக்கம் எழில் கிச்சனில் வைத்து அமிர்தாவுடன் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அமிர்தா  கதையை எழுதி முடிக்குமாறு சொல்லுகின்றார். 

இதை அடுத்து இனியா காலேஜில் டான்ஸ் காம்படிஷன் நடக்க அவரது நண்பர்கள் பெயர் கொடுக்கின்றார்கள். இனியாவை பெயர் கொடுக்க சொல்ல, ஆனால் அவர் வேண்டாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் காலேஜில் நாங்கள் பப்புக்கு போன விஷயத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் இதில் கலந்துகொண்டு வின் பண்ண வேண்டும் என்று நண்பர்கள் சொல்லுகின்றார்கள் இதனால் இனியா யோசிக்கின்றார்.

Advertisement