• Jan 19 2025

பாக்கியாவை அதிரடியாக தோற்கடித்த கோபி.. அதிர்ச்சியின் உச்சத்தில் ஈஸ்வரி!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபிக்கும் பாக்கியாவுக்கும் இடையே ஃபுட் காம்பெடிஷன் கடுமையாக நடைபெறுகின்றது.

இன்னொரு பக்கம் இனியாவின் பிரண்ட்ஸ்கள் குடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு அங்கு வைத்து குடிக்கின்றார்கள். இதனால் இனியா என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து என்ஜாய் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்.

இனியாவுக்கு பாக்கியா போன் பண்ணவும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் செழியனுக்கு போன் பண்ணி இனியாவை பத்திரமாக கூட்டி வருமாறு பாக்கியா சொல்லுகிறார்.


இதைத்தொடர்ந்து கோபி இன்னும் ஒரு செப்பை அழைத்து வர, ஈஸ்வரி அதை நடுவர்களிடம் சொல்லி மாட்டி விடுகிறார். ஆனாலும் கோபி சொல்லிவிட்டு தான் செப்பை மாற்றியதாக நடுவர்கள் சொல்லுகின்றார்கள். மேலும் உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்களும் ஒருவரை மாற்றிக் கொள்ளலாம் என சொல்லுகின்றார்கள்.

இறுதியாக நடைபெற்ற போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்புக்கு மத்தியில் கோபி வெற்றி பெறுகின்றார். பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement