• Jan 18 2025

ஆபீஸில் நின்று கதறி கதறி அழும் கோபி, கணேஷிற்கு எதிராக அமிர்தா எடுத்த முடிவு,பாக்கியாவுக்கு அடித்த அதிஷ்டம்-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதனைப் பார்ப்போம்.

கணேஷ் கூட்டிட்டு வந்திருக்கும் போலீஸ் அமிர்தாவிடம் உனக்கு கணேஷுடன் போறதில் விருப்பமா என்று கேட்கின்றார்.அதற்கு அமிர்தா மறுத்து விட கணேஷ் அமிர்தாவை விட்டுக் கொடுக்க முடியாது என அமிர்தா கிட்ட போக எழில் போய் அவரைத் தடுத்து விடுகின்றார். தொடர்ந்து அந்த போலீஸும் கணேஷைத் திட்டுகின்றார்.


அந்தப் பொண்ணுக்கு உன் கூட வர விருப்பமில்லை, அவங்களை விட்டு ஒதுங்கிப் போறது தான் நல்லம். உனக்கு வேலையும் இல்லை,அந்த பையன் நல்ல வேலைல இருக்கிறான். குழந்தை கூட என்னைப் பார்த்தேவுடன் பயந்து ஓடுது, அதனால அமிர்தா கூட எழில் வாழுறது தான் கரெக்ட் நீ மரியாதையா ஒதுங்கிடு என்கின்றார்.

மேலும் இதுக்கு மேலையும் இவன் வந்து உங்களைத் தொல்லை பண்ணினால் எனக்கு சொல்லுங்க என்று சொல்லி எழிலுக்கு போன் நம்பரைக் கொடுத்து விட்டுச் செல்கின்றார்.மறுபுறம் ஆபீஸ்ல வருமானம் இல்லாததால் எம்பிலோய்ஸ் யாருக்கும் பணம் கொடுக்க முடில ஆப்பீஸை மூடப் போகின்றேன் என்று தன்னுடைய நண்பருக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றார்.


மறுபுறம் எழில் புது ஹொட்டல் ஆரம்பிப்பதற்கு முன்பணம் கட்டுறதுக்கு நாள் நல்லா இருக்கு வாங்க போகலாம் என்று பாக்கியாவை அழைக்கின்றார். ஆனால் பாக்கியா இப்பா இருக்கிற நிலமைல கண்டிப்பாக போக வேண்டுமா என்று கேட்க, ராமமூர்த்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்.


தொடர்ந்து கோபி தன்னுடைய ஆபிஸில் வேலை செய்பவர்களை அழைத்து,தான் கம்பெனியை மூடப் போவதாக அறிவிக்கின்றார். அத்தோடு தரவேண்டிய மீதி சம்பளத்தை இன்னும் ஒரு மாதத்ததிற்குள் தருவதாகவும் கூறி அனுப்பி வைக்கின்றார். பின்னர் தன்னுடைய ஆபிஸை மூடப் போவதை நினைத்து கதறி கதறி அழுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement