• Jul 27 2024

அஜித்தை பாராட்டிய குட் பேட் அக்லி இயக்குனர்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக காணப்படும் நடிகர் அஜித், கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து  வைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தை  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இதற்கான படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், குட் பேட் அக்லி படத்திற்காக உங்களது அர்ப்பணிப்பும், ஈடுபாடும் வியக்க வைக்கிறது. எப்போதும் எனது நன்றிகள் என பதிவிட்டு உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement