• Jan 19 2025

சிங்கிளா சுற்றித்திரிந்த பிரேம்ஜிக்கு சிம்பிளா முடிந்த எங்கேஜ்மென்ட்! வைரல் போட்டோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக திகழ்பவர் தான் வெங்கட் பிரபு. இவரின் தம்பிதான் நடிகர் பிரேம்ஜி. இவரை அதிகமாக அவருடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தான் காண முடியும்.

40 வயதை கடந்த நிலையிலும் பேச்சிலராகவே ஊரைச்சுற்றி வந்த பிரேம்ஜிக்கு நாளைய தினம் திருத்தணி கோவிலில் எளிமையாக திருமணம் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்து என்ற பெண்ணை பிரேம்ஜி நாளை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் காதல் திருமணம் என்று கூறப்பட்டது, ஆனால் அவர் மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் கூறப்பட்டது.


மேலும் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் தங்களது பிரவேசியை மதித்து ரசிகர்கள் தங்களுக்கு இருக்கும் இடத்தில் இருந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் பிரேம்ஜியின் எங்கேஜ்மென்ட் போட்டோ வெளியாகி வைரலாகி உள்ளன. இதில் மணமகனாக காணப்படும் பிரேம்ஜி சிரித்த முகத்துடன் படு ஜோராக காணப்படுகின்றார்.


Advertisement

Advertisement