ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே திரிஷா இவரது கேரக்டர் பெயர் "ரம்யா" என நேற்று வெளியாகிய பட அப்டேட் ரசிகர்கள் அந்தப் பெயரை கேட்டுத் தெரிய வந்த சில சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
அதிக் ரவிச்சந்திரனின் படங்களில் "ரம்யா" என்ற பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது அதிக கவனத்தை பெற்றுள்ளது. அவர் இயக்கிய முதல் படம் "திரிஷா இல்லனா நயன்தாரா"வில் நாயகியாக நடித்த ஆனந்தியின் பெயர் "ரம்யா" அதேபோல் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தில் தமன்னா, "பகீரா" படத்தில் அமரா தஸ்தூர், "மார்க் ஆண்டனி" படத்தில் ரித்து வர்மா ஆகியோரிற்கு இயக்குநர் "ரம்யா" என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார்.
இப்போது "குட் பேட் அக்லி" படத்தில் திரிஷாவுக்கும் "ரம்யா" என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்ச்சியைக் கண்ட ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து "ரம்யா" என்னும் பெயர் ஆதிக் ரவிச்சந்திரனின் "Ex" பெயராக இருக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த சுவாரஸ்ய அப்டேட்டுடன் தற்போது இந்த தகவல்கள் நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!