• Feb 24 2025

dragon பட இயக்குநரின் x தள பதிவு..! யாருடன் இருக்கின்றார் தெரியுமா..?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நேற்று முன்தினம் வெளியாகிய dragon திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப் படத்தில் இவரது நண்பன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இவரிற்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார்.


தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது. தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய neek படத்துடன் போட்டி போட்டு வெளியாகி இருந்தாலும் இப் படம் ஒருபடி மேல் சென்று வைரலாகி வருகின்றது. மற்றும் இவர்கள் மீண்டும் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


இந்த நிலையில் இவர் தனது அம்மா அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை “நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத எஞ்சினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் 'டிராகன்' படம்"என கூறி பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement