• Jan 18 2025

கணேஷ் பிரச்சனையிலும் பலியாடாக சிக்கும் பாக்கியா! அமிர்தாவின் இறுதி முடிவு என்ன?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இனி என்ன என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

அதன்படி இதுவரையில், செழியனின் விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவர, பாக்கியாவை போட்டு திட்டுகின்றனர். அந்தநேரத்தில் பாக்கியாவுக்கு ஆதரவாக ராதிகா களமிறக்கி கோபி மற்றும் ஈஸ்வரியுடன் சண்டை போடுகிறார். இதையடுத்து, செழியன் விஷயத்தில நடந்த மாதிரி எழில் விஷயத்திலையும் நடக்க கூடாது. எழிலிடம் எல்லா விஷயத்தையும் சொல்லணும் என முடிவு எடுக்கிறார். 

இதை தொடந்து, அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் பாக்கியா கேட்ட டைம் வரை பொறுக்க முடியாமல் வீட்டிற்கு வருகிறார். அங்கு வந்து தன் பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் சொல்கிறார். இவ்வாறு எதிர்வரும் நாட்களில் பாக்கியலட்சுமி சீரியல்  நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், கணேஷ் விவகாரமும் பாக்கியாவின் தலையில் தான் விழுமோ என்பதோடு, தன் முன்னாள் கணவர் உயிரோடு உள்ளார் என்பதை அமிர்தா அறிந்தால் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஆனாலும் அவர் எழிலை விட்டு விலக மாட்டார் என்றே தோன்றுகிறது. அத்துடன், பாக்கியாவிற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வருவதால் ரசிகர்களும் கவலையில் காணப்படுகின்றனர்.

எனினும், பாக்கியா அனைத்தையும் கடந்து மீண்டும் குடும்பத்தை பழைய நிலைக்கு மாற்றுவார் என்பதோடு, இனி ராதிகாவும் பாக்கியாவுக்கு ஆதரவாக செயற்படுவார் என மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement