தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் கவுதம் ராம் கார்த்திக், பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகனாவார். தற்போது அவர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்ததாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்காக கவுதம் ராம் கார்த்திக் எடுத்த உழைப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிக்ஸ்பேக் உடல் அமைப்பிற்கு மாற அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “9 மாதங்களாக வியர்வை, பசி, வலி, கண்ணீர் என அனைத்தையும் தாண்டி கடினமாக உழைத்தேன். பழைய காயங்களிலிருந்து மீண்டு, என் பயிற்சியாளரின் உதவியுடன் இந்த மாற்றத்தை அடைந்தேன். என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய மாற்றம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கதாபாத்திரத்தில் தன்னை நம்பிய இயக்குனர் மனு ஆனந்த் அவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஹீரோவாக அறிமுகமான அவர், தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த மாற்றம் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்......
9 months of blood, sweat and tears, pushing through limitations, resisting cravings, chasing consistency and overcoming old injuries.
With the help of my trainer Dinesh preparing for #Mr.X has been one of the greatest transformative journeys of my life.
Forever grateful to my… pic.twitter.com/EIqDEixxHB
Listen News!