• Jun 21 2026

ருக்மிணி வசந்த் மிஸ் பண்ணிய வாய்ப்பு! தனுஷுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை..

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தைச் சுற்றி புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் தேதிகள் ஒத்துப்போகவில்லையெனும் காரணத்தால் அவர் இந்த திட்டத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், அந்த கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தற்போது சாரா அர்ஜுன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜுன், தற்போது முன்னணி கதாநாயகியாக உருவெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான கதைகளில் நடித்து வரும் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Advertisement

Advertisement