• May 09 2026

பாக்ஸ் ஆபீஸில் பிரதீப் ரங்கநாதனின் அசுர வேட்டை.. - ஆடிப்போன கோலிவுட்.! வெளியான வசூல்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக பிரதீப் ரங்கநாதன் திகழ்கிறார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘LIK’ (Love Insurance Kompany) திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 

இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளதுடன், வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார்.


பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் நிலையான முன்னேற்றத்தை காட்டி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘LIK’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 5 நாட்களில் ரூ.45 கோடி வசூலை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரதீப் ரங்கநாதனின் வளர்ந்து வரும் மார்க்கெட்டையும், ரசிகர் ஆதரவையும் தெளிவாக காட்டுகிறது.

புதுமையான கதைக்களம் மற்றும் எளிமையான காதல்-காமெடி கலவையுடன் உருவாகியுள்ள இந்த படம், தொடர்ந்து வசூலில் முன்னேறுமா என்பது தற்போது திரையுலகில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.

Advertisement

Advertisement