• Apr 20 2026

நண்பா Santhanam உனக்கு இன்னைக்கு Birthday.. புது Bike வாங்கி Shock கொடுத்த கூல் சுரேஷ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. பிக் பாஸ் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் கூல் சுரேஷ். 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூல் சுரேஷ் தனது நகைச்சுவை மூலம் சக போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்ததோடு, தானும் வைக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்தார்.


எனினும், ஒரு கட்டத்தில் கூல் சுரேஷ்க்கு தனது வீட்டின் நினைவு வரவே பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி வெளிய செல்லத் துணிந்தார். இதை தொடர்ந்து அடுத்த வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிட் ஆகி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகரும், கூல் சுரேஷின் நண்பருமான சந்தானத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, புது பைக் ஒன்று வாங்கியுள்ளார் கூல் சுரேஷ்

அதன்படி அவர் கூறும் போது, எல்லாரும் பிக் பாஸ்க்கு போயிட்டு வந்த பிறகு வீடு வாங்குவாங்க, கார் வாங்குவாங்க, அதன்படி நான் பைக் வாங்க வந்திருக்கேன்.


இன்றைய தினம் நான் இந்த வண்டி வாங்குவதற்கு முக்கிய  காரணம் என்னுடைய நண்பன் சந்தானத்துக்கு பிறந்தநாள். இந்த  நாளில் நன்னாளில் பொன்னாளில் இந்த வண்டியை எடுக்கிறது எனக்கு ஆசிர்வாதம் போன்றது.


இந்த வண்டி என்ன சுமந்துட்டு போகுது. ஆனா, என்னை  இதுவரைக்கும் சுமந்தது, இனியும் சுமக்க போறது என் நண்பன் நீ மட்டும் தான். என்னைக்குமே நான் உனக்கு கடமைப்பட்டிருக்கேன். கூடிய விரைவில் என் ரேஷன் கார்டில் கூட உண்ட பெயரை பதிவதற்கு வாய்ப்பு இருக்கு சந்தானம் என்று சொல்லி புதிய வண்டியை அடுத்து கெத்தாக ஓடி காட்டி உள்ளார் கூல் சுரேஷ்.


Advertisement

Advertisement