• Dec 04 2024

ஜப்பானில் புரியாத பாஷையில் கின்னஸ் சாதனை படைத்த ஹீரோயின்ஸ்! லைக்ஸ் அள்ளும் வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80, 90ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களுள் ஒருவர் தான் நெப்போலியன். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருப்பார். இவரது நடை, உடை, பாவனைகளை பார்த்தாலே பலருக்கும் ஒரு வித பயமும் மரியாதையும் காணப்படும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். அதற்கு காரணம் தனது மூத்த மகன் தனுஷ் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது தான். தனது மகனுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கிலேயே சினிமா, அரசியல் என்பவற்றில் இருந்து விலகி மகனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

d_i_a

அதன்படி இந்தியாவில் இருந்து தனுசுக்கு சிகிச்சைகள் பயன் அளிக்காத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு செட்டிலான பின் ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருவதோடு விவசாயத்தையும் அமெரிக்காவில் ஊக்குவித்து வருகின்றார் நெப்போலியன்.


கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் தனுசுக்கு ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்காக திருநெல்வேலியில் இருந்து பெண்ணை தேர்ந்தெடுத்தார். திருமணம் முடித்த பின்பு மிகவும் எமோஷனல் ஆன நெப்போலியன், எங்களுடைய குலசாமி என்று தனது மருமகளை பற்றி பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன.

இந்த நிலையில், நெப்போலியன் மகன் திருமணத்திற்கு கலந்து கொள்வதற்காக வந்த சினிமா பிரபலங்களான மீனா, ராதிகா, குஷ்பூ, கலா மாஸ்டர் மற்றும் சரத்குமார் ஆகியோர் ஜப்பானில் போட்ட குத்தாட்ட வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement