• Jun 14 2026

கிரிக்கெட் தெரியாதவரா ராம்சரண்? பும்ராவை பற்றி இப்படியா பேசுவது.. கொந்தளித்த ரசிகர்கள்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

ராம்சரண் கிரிக்கெட் வீரர் பும்ரா குறித்து தெரிவித்த ஒரு சின்ன கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பெத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஜான்வி கபூர் , A. R. ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவின் போது இந்திய கிரிக்கெட் வீரர்களை ஒரு வார்த்தையில் விவரிக்குமாறு ராம் சரணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சச்சின் “ஜாம்பவான்”, MS தோனி “கூலானவர்”, விராட் கோலி  “நெருப்பு”, ரோஹித் சர்மா  “எல்லோருக்குமான மனிதர்” என சுவாரஸ்யமாக பதிலளித்தார்.


ஆனால், பும்ரா குறித்து பேசும்போது, தவறுதலாக அவரை கால்பந்து வீரர் என குறிப்பிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் ராம் சரணை விமர்சித்தனர்.

இதையடுத்து உடனடியாக தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த ராம் சரண், “சில நேரங்களில் இப்படி தவறுகள் நடக்கலாம். இதற்காக பும்ராவிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அவரது ஆட்டத்தின் மிகப்பெரிய ரசிகன்.” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement