• Jul 12 2026

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின் இப்படியா? சினேகா வெளியிட்ட வீடியோ

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சினேகா, பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார். குடும்ப பாசம் மற்றும் எளிமையான நடிப்புக்காக அறியப்படும் அவர், நடிகர் பிரசன்னாவைக் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சினேகா சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தனது குடும்ப தருணங்கள், நிகழ்ச்சி பங்கேற்புகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். 


இந்த நிலையில், சமீபத்தில் அவர் புடவையில் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

அந்த வீடியோவில் பாரம்பரிய புடவையில் மிக எளிமையாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறார். ரசிகர்கள் பலரும் அவரின் அழகையும், ஸ்டைலையும் பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகும் சினிமா மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் சினேகா, தனது குடும்ப வாழ்க்கையும், தொழில்முறை வாழ்க்கையும் சமநிலையாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வீடியோவும் அவரது ரசிகர்களிடையே மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement