இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. இதே நேரத்தில், நடிகர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகாவைச் சுற்றிப் புதிய சர்ச்சை ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவில், நடிகர் சல்மான் கான் ராஷ்மிகாவை காரில் இருந்து வெளியே இழுத்து, ஒரு புகைப்படக்காரருக்குப் போஸ் கொடுக்க அழைத்தது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராஷ்மிகா அத்தருணத்தில் தயக்கத்துடன் இருப்பது போலவும், சல்மான் கான் தன்னிச்சையாக அவரை போட்டோ எடுப்பதற்கு அழைத்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
ராஷ்மிகா மற்றும் சல்மான் கான் இணைந்து நடித்துள்ள ‘சிக்கந்தர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்திற்கு முன்பே பெரிய அளவிலான புரோமோசன்கள் நடைபெற்றன. ஆனால் படம் வெளியானதற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் நன்றாக வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் ரசிகர்கள் பலரும் சல்மான் கான் மீது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Listen News!