• May 16 2026

சான்ட்ரா -பிரஜின் வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 9 மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களாக மாறிய சான்ட்ரா மற்றும் பிரஜின், தற்போது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். திரைத்துறையிலும், தொலைக்காட்சி உலகிலும் தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிய இந்த ஜோடி, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.


இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்நிலையில், அந்த குழந்தைகளின் 7வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் வீடியோவை சான்ட்ரா-பிரஜின் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணங்கள் இடம்பெற்றுள்ளன. கேக் வெட்டும் காட்சிகள், குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்புகள்  அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement