• Aug 24 2025

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகர்...!அதிர்ச்சியில் ரசிகர்கள்..!யார் தெரியுமா?

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் பல திரைப்படங்களில்  நடித்து  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது போதைப்பொருள் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . 


இந்த நிலையில் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டபட்டுள்ளது. மேலும் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில் ஸ்ரீகாந்த்திற்கு நோட்டிஸ்  அனுப்பி  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்நிலையில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர்கள் பிரதீப் குமார் உட்பட 2 பேர் கைது விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்  இத்தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன் தங்கள் கருத்துக்களை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.






Advertisement

Advertisement