• Oct 01 2025

திரைக்கு வரவிருக்கும் நாயகன்! ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக ஒரு சிறப்பான நிகழ்வை ஏற்படுத்த உள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாக விளங்கிய ‘நாயகன்’ திரைப்படம், திரைக்கு வந்த 38 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.


பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவான இந்த படம் சமூகக் கதையை மையமாகக் கொண்டது. இதனை வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி, கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம், தமிழக மக்களின் நெஞ்சை வென்றதோடு, இந்திய சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றது. இது மும்பை மக்களின் சமூகநீதி மற்றும் வாழ்க்கையை மையமாக கொண்டது.


Advertisement

Advertisement