தெலுங்கு முன்னணி நடிகையாக இருந்து வரும் டிம்பிள் ஹயாத்தி தற்பொழுது வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது வீட்டு வேலைக்கார பெண் ஒருவர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக, ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகை டிம்பிள் ஹயாத்தியின் வீட்டில் வேலை பார்த்துவந்த பெண் ஒருவர், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும் இதனால் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஹைதராபாத் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஹைதராபாத் போலீசார் டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Listen News!