• Oct 23 2025

சிலம்பரசனின் "அரசன்" பட promo வீடியோவிற்கு இப்டி ஒரு வரவேற்பா.? குஷியில் ரசிகர்கள்.!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் "அரசன்" படத்தின் promo வீடியோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகராக நடிக்கும் சிலம்பரசனின் நடிப்பு மற்றும் கேரக்டர் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


வெற்றி மாறன் என்றால் தமிழ் சினிமாவில் அதிரடியான கதைகள், வலுவான கதாப்பாத்திரங்கள் மற்றும் மெருகூட்டப்பட்ட திரைக்கதைகளுடன் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இயக்குநர். "அரசன்" படத்திலும் அவர் தனது இயக்க திறன்களை வெளிப்படுத்தி வருகின்றார்.

படத்தின் பெயரைப் போல, அரசன் என்ற கேரக்டர் அரசியல், குடும்பம் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களை ஒட்டிச் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி மாறனின் முன்னாள் படங்கள் Block buster அடித்தது போலவே "அரசன்" படமும் வெளியாகி பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த படத்தின் promo வீடியோ யூடியூபில் வெளியாகி அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. வைரலான வீடியோ இதோ.!


Advertisement

Advertisement