• Dec 29 2025

நடிகை சரண்யாவின் மகள் என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா.? வைரலான தகவல்கள்....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய இடம் பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணனின் மகள் கல்வியில் சிறந்து விளங்கி, டாக்டர் பட்டம் பெற்று குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 


சமீபத்தில் சரண்யா தனது சமூக வலைத்தளங்களில் மகளின் பட்டம் வாங்கும் விழாவின் சில அழகான புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு பெருமிதம் தெரிவித்தார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில், சரண்யாவின் மகள் வெற்றிகரமாக தனது டாக்டர் படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளார். இவ்விழாவில் அவரது, நண்பர்கள், மற்றும் குடும்பம் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.

இவ்விழா சார்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement