கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கிச்சா சுதீப், வில்லன் மற்றும் ஹீரோ என இரு வகை கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். குறிப்பாக தமிழ் திரையுலகிலும், ‘நான் ஈ’, ‘அருந்ததி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், கிச்சா சுதீப் தற்போது நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மார்க்’ குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மார்க்’ திரைப்படம் கிச்சா சுதீப்பின் 47-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். ஆக்சன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், சுதீப்பின் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் வெளியான ‘மார்க்’ படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசரில் இடம்பெற்ற அதிரடி காட்சிகள், கிச்சா சுதீப்பின் ஸ்டைலிஷ் ஆக்சன் சீன்கள் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
படக்குழு அறிவிப்பின் படி, ‘மார்க்’ திரைப்படம் வருகின்ற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கன்னடம் மட்டுமல்லாமல், பிற மொழிகளிலும் இந்த படம் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘மார்க்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என படக்குழு தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Listen News!