• May 08 2024

ஸ்கூல்ல ரொம்ப நல்லா படிச்ச பிரபல சீரியல் நடிகை! ஆனா ஆடிசன் போனாலே பாவம் பார்ப்பங்களாம்! இறுதியில் கைகொடுத்தது யார் தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரொம்பவே சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை .இந்த சீரியல்ல ரொம்ப பாவமா, ரொம்ப ரொம்ப அழகா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தரா மாறியிருக்கிற மீனா அப்பிடி என்கின்ற கதாபாத்திரத்தில நடிச்சிட்டு இருக்கிறவங்க தான், கோமதி பிரியா அவர்கள் .

1993ம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி மதுரையில பிறந்தாங்க .இவங்களுடைய சொந்த ஊர் மதுரை தான் .இவங்க பிறந்தது ,வளர்ந்தது ,படிச்சது எல்லாமே மதுரையில தான் .

இவங்க குடும்ப பின்னணி பார்த்தால் பெரிய வசதியான குடும்பம் எல்லாம் இல்ல நடுத்தர குடும்பம் தான் என்று அவங்களே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாங்களாம் .அம்மா ,அப்பா ,தம்பி ,தங்கச்சி இந்த மாதிரி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவங்க தான் கோமதி பிரியா.


இவங்க சின்ன வயசில இருந்தே சுதந்திரமா இருக்கனும் யாரையும் நம்பி இருக்க கூடாது என்று நினைக்கிற இவங்க படிக்கிற காலத்திலையும் சரி சின்ன சின்ன வேலைகள் பார்ட் டைம்ல செய்வாங்களாம் .தனக்கு என்ன தேவையோ அத தானே செய்யிற மனப்பக்குவம் சின்ன வயசில இருந்தே இருந்திருக்காம் .

எப்பவுமே அம்மா அப்பாவை தொல்லை பண்ண கூடாது தம்பி ,தங்கச்சிகளை பார்த்து கொள்ளணும் ,அவங்கள படிக்க வைக்கனும் அதுக்கு நான் நல்ல வேலைக்கு போகனும் நிறைய சம்பாதிக்கனும் என்ற எண்ணத்தில தான் சின்ன வயசிலயே இருந்துருக்காங்க.

இவங்க படிச்சதும் சாதாரண பாடசாலையில தான் இவங்க நல்லா படிக்கிறத பார்த்த அவங்க ஆசிரியர்கள் அவங்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தாங்க அந்த ஸ்காலர்ஷிப்ல தான் இவங்க படிச்சி வந்து இருக்காங்க .

காலேஜ்லயும் நல்லா படிச்ச இவங்க நல்ல மார்க்கும் வேண்டி இருக்காங்க .அத பார்த்த இவங்க காலேஜ் ஷேர் மேன் இவங்க சாதாரண குடும்பத்தில இருந்து வந்து இவ்வளவு நல்லா படிக்கிறாங்க  என்று அவரும் படிக்க உதவி செய்து படிச்சி முடிய கோமதி அவங்களுக்கு வேலையும் எடுத்து கொடுத்தாங்களாம் .

சென்னையில ஒரு கம்பனில வேலை பார்த்திட்டு இருந்த இவங்களுக்கு ஒரு கட்டத்தில அந்த வேலை இவங்களுக்கு பிடிக்காம போனதும் . என்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வாற மாறி ஏதாவது பண்ணனும் ஒரே மிஷின் மாறி வேலை செய்ய ஏலாது என்று ஒரு கட்டத்தில வேலைய வெறுத்தாங்களாம் .


சரி அடுத்த என்ன பண்ணலாம் என்று நினைச்ச இவங்களுக்கு மீடியால சின்ன திரையில ஒரு மொடேல்லிங் வாய்ப்பு கிடைச்சுது . அது ஒரு சின்ன ரோல் தான் அதையும் தவற விடாமல் நடிச்ச இவங்களுக்கு மீடியால ஆர்வம் வந்ததும் மீடியாவே தெரிவு செய்வம் இங்க நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைச்ச இவங்க செய்ற வேலைய விட்டா சாப்பாடு கூட இல்லாம கஷ்டப்படனும் என்று அந்த வேலையும் செய்து கொண்டு இதையும் பார்த்து இருக்காங்க .

ஒரு கட்டத்தில 2யையும் பார்க்க முடியாத இவங்க அந்த வேலைய விட்டுட்டு மீடியாலேயே இறங்கிட்டாங்களாம் . வீட்டில எதையுமே சொல்லாம தானாவே முடிவெடுத்தாலும் வீட்டில இருக்கிறவங்க எந்த எதிர்ப்பும் சொல்லாம சப்போர்ட் பண்ணியே இருக்காங்க .

எந்த ஆடிசன் போனாலும் இந்த பொண்ணு பார்க்க பாவமா இருக்கு என்ன ரோல் கொடுக்கலாம் என்று யோசிப்பாங்களாம் .இந்த பொண்ணு நடிக்குமா என்றும் யோசிச்சாங்களாம் . ஒரு சில இடங்களில அவமான பட்ட இவங்க எதையும் கணக்கு எடுக்காம முயற்சி செஞ்சி இருக்காங்க .


ஒரு கட்டத்தில நடிப்பு என்டா இப்பிடித்தான் என்று  நடிப்பை கற்று கொண்ட இவங்க,  நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் சின்ன ரோல் பண்ணி அவங்க நடிப்பை வளர்த்தாங்க . இருந்தாலும் ஒரு குட்டியான ரோல் கூட நான் ஒழுங்கா பண்ணல எண்டு அவங்களே பீல் பண்ணினாங்களாம் .

ஒரு தெரிஞ்சவங்க மூலமா பாலா அவர்களுடைய வர்மா படத்தில் வாய்ப்பு கிடைச்சது . பாலா மூலம் நடிப்பை கற்று கொண்டாங்க .ஓவியா சீரியலிலும் வாய்ப்பு கிடைச்சி அதிலயும் நடிச்சாங்க .நல்லா  ஆரம்பிச்ச இவங்க விஜய் டிவியில வேலைக்காரன் சீரியல் நடிச்சி ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானாங்க .

அவங்க வாழ்க்கை திருப்பமாக இருந்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை இந்த சீரியல் மூலமாக எல்லோருடைய மனதிலையும் இடம் பிடிச்சிட்டாங்க என்டே சொல்லலாம் . இந்த சீரியல் மூலம் பிரபலமான இவங்க இன்னும் நிறைய நல்ல ரோல் பண்ணனும் என்றும் சொல்லி இருக்காங்களாம் .

Advertisement

Advertisement

Advertisement