• Jul 05 2026

தவெக தலைவர் விஜய்க்குள் ஜெயலலிதாவை பார்க்கிறேன்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ளது. மக்கள் அனைவரும் மே 4ஆம் தேதி வெளியாகும் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


அவர் கூறியதாவது, மேடையில் விஜய் பேசும் விதமும், அவரது வார்த்தைகளின் தாக்கமும் முன்னாள் முதல்வர் J. ஜெயலலிதா அவர்களை நினைவூட்டுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும், “அன்று அம்மையாரின் அரசியல் இலக்காக கலைஞர் இருந்தார். அதுபோல் இன்று விஜய்யின் பேச்சுக்கள் தற்போதைய முதல்வரை குறிவைத்து பேசப்படுகின்றன.” என்றும் கூறியுள்ளார்.

அவரது கருத்துப்படி, நேருக்கு நேர் தாக்கும் அரசியல் பேச்சு இருவரிடமும் காணப்படுகிறது. தேர்தல் பிரச்சார மேடைகளில் விஜய் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் அரங்கில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சீனு ராமசாமி பகிர்ந்த கருத்துகள் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி, தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement