• May 03 2026

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையாகவுள்ள 'பாலன்' திரைப்படம்..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

'பாலன்' திரைப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், வணிக ரீதியாக வெற்றி பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் அடுத்த படமாக இருப்பதால் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


இந்த படத்தை KVN Productions மற்றும் Thespian Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தயாரிப்பாளர்களாக வெங்கட் கே. நாராயணா மற்றும் சைலஜா தேசாய் செயல்பட்டுள்ளனர். மேலும், ஒளிப்பதிவை ஷைஜூ காலித் மேற்கொள்ள, இசையமைப்பை சுசின் ஷியாம் கவனிக்கிறார்.

இயக்குநர் சிதம்பரம் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைப்பு காரணமாகவே இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே நல்ல ஹைப் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பாலன்’ திரைப்படம் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 14ஆம் தேதி திரையிடப்பட உள்ளது என கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் சர்வதேச அளவிலும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement