• May 20 2024

உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்-யாரும் எதிர் பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.

மேலும் இப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். அத்தோடு இப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். நடிகர் பகத் பாசில் இன்று படப்பிடிப்பு இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடிக்கின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement