அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாவதில் பல பிரச்சனைகள் சந்தித்தது. படத்தின் வெளியீடு தடை செய்யப்பட்டு திரையரங்குகளில் அதிகாலை தொடக்கம் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது முக்கிய உத்தரவொன்றை பிறப்பித்து இப்படத்தை திரையிட அனுமதித்து உள்ளது.
இந்நிலையில் தற்போது இப் படத்தின் இயக்குநர் ரசிகர்களுக்கு ஒரு அறிவித்தல் விடுத்துள்ளார். அதாவது "எல்லாருக்கும் வணக்கம். வீர தீர சூரன் இன்னைக்கு ஈவினிங் ஷோல இருந்து திரையரங்குகளில் வெளியாகிறது. எங்க அப்பா இன்னைக்கு காலையில 3 தடவை தியேட்டருக்கு போயிட்டு, ஷோ ரிலீஸ் ஆகவில்லை என்று சொல்லி திரும்ப வீட்டுக்கு வந்திருக்காரு. அதிலிருந்து சீயான் விக்ரம் சாரின் ரசிகர்களும், பொதுமக்களும் எவ்வளவு இன்னல்கள் உருவாகி இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்க எல்லார்கிட்டயும் படக்குழு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலையிலிருந்து தியேட்டரில் ஆரவாரத்தோடு காத்துக் கொண்டிருந்த சியான் விக்ரம் அவர்களின் ரசிகர்களுக்கும், இந்த பிரச்சனையில் எங்க கூட உறுதுணையாக நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இன்னைக்கு ஈவ்னிங் திரையரங்குகளில் வீர தீர சூரன் வெளியாகிறது போய் பாருங்க" என கூறியுள்ளார்.
Listen News!