பிரபல இயக்குநர் h. வினோத் இயக்கத்தில் விஜய் ,பூஜா ஹெட்ஜ் ,பொப்பி தியோல் நடித்து வரும் "ஜனநாயகன் " திரைப்படத்தினை kvn நிறுவனம் தயாரித்து வருகின்றது. அடுத்த ஆண்டு பொங்கலிற்கு படத்தினை வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தினை மையகருத்தாக வைத்து படத்தினை எடுத்து வருகின்றனர். மேலும் எம் .ஜி ஆர் ஸ்டைலில் வெளியாகிய படத்தின் போஸ்ட்டர் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து இப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில் தற்போது இப் படத்தின் முதல் பாடலினை எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி விஜயின் பிறந்தநாளினை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வெளியீட்டிற்கு நீண்ட இடைவெளியின் முன்னர் பாடலினை வெளியிடுவதால் இதில் அரசியல் நோக்கங்கள் நிறைய இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!