மலையாள சினிமாவில் முதலிடம் வகிப்பவராக மோகன்லால் காணப்படுகின்றார். பல தலைமுறைகள் கடந்தும் இன்று வரை ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டு வருகின்றார். அவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியது. அந்த வரிசையில் தற்போது 360வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘துடரும்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'துடரும்' படத்தை இயக்கியுள்ள தருண் மூர்த்தி இதற்கு முன்பு பல சமூகப் பார்வையுள்ள திரைப்படங்களை இயக்கி, தனது தனித்துவமான கதை மூலம் ரசிகர்கள் மனதில் கவனம் பெற்றவர். இவரின் திரைப்படங்களில் பார்வையாளர்களை யோசிக்க வைக்கும் அணுகுமுறைகள் இடம்பெறும் என்பதால், 'துடரும்' படமும் ஒரு தீவிரமான கதையைக் கூறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான ரஞ்சித் தயாரித்து வருகின்றார். இது தான் ரஞ்சித் மற்றும் மோகன்லால் கூட்டணியில் வரும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடித்துள்ளார்.
இந்நிலையில் படக்குழு தற்பொழுது 'துடரும்' படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் படம் ரசிகர்களை எந்த அளவிற்கு கவரும் என்பதை திரைக்கு வந்த பின்னர் தான் தெரியும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். எனினும், தற்போது வெளியாகியுள்ள தகவல்களையும், ட்ரெய்லரையும் பார்த்தால் இது மலையாள சினிமாவின் இன்னொரு பிரமாண்டமான படமாக மாறும் எனக் கூறப்படுகின்றது.
Listen News!