• Jan 19 2025

நடிகைகளுக்கு இடையே விரிசலான ஈகோ பிரச்சினை! சூட்டிங் ஸ்பாட்டில் குடுமிப்பிடி சண்டை! அது யார் யாரென தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகில் பிரபலமாக திகழும் முன்னணி நட்சத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அவர்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.

அவ்வாறான சம்பவமொன்று நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி நடிகைகளின் வாழ்வில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாகவே சினிமாத் துறையில் உள்ள நடிகை, நடிகர்கள் தம் துறை சார்ந்தவர்களோடு நட்பாக தான் இருப்பார்கள். ஆனாலும் ஒரு சிலர் தமது போட்டி, பொறாமை மூலம் ஏனையோரை மட்டம் தட்டவே முனைகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான படமொன்றில் நடந்த சம்பவம் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


அதாவது, 2006 இல் வெளியான ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் தான் நடித்த நடிகைகளுக்கு சண்டை வந்து பெரிய பிரச்சனையானது. அதில், நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி என்ற இரு நடிகைகள் சண்டையிட்டு கொண்டனர். 

அதற்கு காரணம், ஒரு காட்சியில் இருவரையும் இணைந்து நடிக்குமாறு உதவி இயக்குனர் கூறியது தான்.எனினும், இருவரின் ஈகோ பிரச்சினையாக அவ்வாறு சேர்ந்து நடிக்க முடியாது என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக நடிக்க மாட்டோம் என்று சூட்டிங் ஸ்பாட்டில் கூறியதோடு, யார் பெரிய நடிகை யாரோட மார்க்கெட் பெரியது என்று சண்டையிட்டு வாக்குவாதமும் செய்துள்ளனராம்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் வைத்தே இரு நடிகைகளும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டையும் போட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த இடத்திலிருந்த படக்குழு அவர்களை சமாதானம் செய்துள்ளது.பிறகும் அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் அவர்கள் ஒன்றாகவே நடிக்கவில்லையாம்.

இதையடுத்து, அவர்களை தனித்தனியாக நடிக்க வைத்து படத்தினை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனாலும் அப்படம் வெளியானது கூட தெரியாமல் தயாரிப்பாளருக்கே பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement