• Nov 22 2025

"ஜனநாயகன்" படத்தில விஜய் பக்கா Farewell கொடுப்பாரு.. இயக்குநர் ஹெச்.வினோத் உறுதி.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் தளபதி விஜய். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், விஜய் நடித்த ஒவ்வொரு படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது, நடிகர் விஜய் தனது கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் "ஜனநாயகன்" திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.


இப்படத்தின் இயக்குநராக செயல்படுகிறார் ஹெச்.வினோத். இந்நிலையில், இன்று (19 செப்டம்பர் 2025) இயக்குநர் ஹெச்.வினோத் ஒரு அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில், "நடிகர் விஜய்க்கு பக்கா Farewell படமாக ‘ஜனநாயகன்’ இருக்கும். மாஸ், கமர்சியல், ஆக்சன் எல்லாமே இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் ஒரு complete meals மாதிரியான படம் தான் இது. ஒவ்வொரு விஷயத்திலும் விஜய்யின் ரசிகர்கள் திருப்தியடைவார்கள்!" எனக் கூறியுள்ளார். 


இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் இது நடிகர் விஜய் அரசியலுக்கு சென்ற பின் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதாலேயே இந்த படத்திற்கு ஒரு sentimental value உள்ளது.

Advertisement

Advertisement