• Jan 19 2025

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி உதவி வழங்கிய ஹரிஸ் கல்யாண்- குவியும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலால் டிசம்பர் 4ந் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்துவிட்டது.

 இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.


பெரும்பாலான ஆறுகள் நிரம்பிவிட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மார்பளவு தண்ணீர் இருந்ததால், பலர் முதல் தளத்திலும் மொட்டை மாடியிலும் தஞ்சம் அடைந்தனர்.

 அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் மீட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுளளனர்.


நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் ஹரிஸ் கல்யாணும் நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement