• Oct 30 2025

க்ரிஷ் விஷயத்தில் ரோகிணி எடுத்த அதிரடி முடிவு..? மனோஜை மடக்கிய ராணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  க்ரிஷின் மனநிலையை அறிய அவருக்கு பரீட்சை வைக்கின்றார்கள்.  அதன்படி ஒரு பக்கத்தில் ஆப்பிள், ஒரு பக்கத்தில் பணமும் வைத்து அதில் ஒன்றை எடுக்கச் சொல்கிறார்கள்.  க்ரிஷ் ஆப்பிளை  எடுக்கின்றார். இதனால்  க்ரிஷ் மீது எந்த தப்பும் இல்லை என தெரிய வருகின்றது. 

இதை பார்த்து உடனே சந்தோஷப்பட்ட  முத்து க்ரிஷை தூக்கி கொஞ்சுகின்றார்.  கம்பளைண்ட் கொடுத்தவரும் தானும் க்ரிஷ் ஆப்பிளை தான் எடுக்க வேண்டும் என நினைத்ததாக சொல்லுகின்றார். இறுதியில்  அனைவரும் சமாதானம் ஆகின்றனர்.  இதனை முத்து அண்ணாமலையிடம் சொல்ல, அண்ணாமலை தான் க்ரிஷ் பெயரில் அர்ச்சனை செய்வதாக சொல்லி சந்தோஷப்படுகிறார். 

ஆனால் விஜயா யார் வீட்டுப் பையனுக்கு  யார் அர்ச்சனை பண்ணுவது என அண்ணாமலையை திட்டுகின்றார்.  அதன் பின்பு இதை வைத்து டாக்டர் பட்டம் வாங்க  முயற்சி செய்யணும் என்று யோசிக்கின்றார். 


இன்னொரு பக்கம் ரோகிணியும் க்ரிஷ்  பற்றி நினைத்து சந்தோஷப்படுகிறார்.  அந்த நேரத்தில் வித்யா நான் சொன்னது போலவே முத்துவும் மீனாவும் க்ரிஷை காப்பாற்றி விட்டார்கள். நீ க்ரிஷை அவர்களிடமே தத்து கொடுத்துவிடு என்று சொல்லுகின்றார்.  ஆனாலும் ரோகிணி  வித்யாவுக்கு திட்டுகின்றார். 

அதன் பின்பு இதனை சமாளிக்க  அம்மாவை தான் அழைக்க வேண்டும் என்று  அம்மாவுக்கு போன் பண்ணி அழுது புலம்பி நடிக்கின்றார்.  இதனை வித்யாவும் மகேஷ்வரியும் பார்த்துவிட்டு   உன் நடிப்புக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என  ரோகிணியை  கிண்டல் செய்கின்றார்கள். 

மறுபக்கம் மனோஜ் ராணியின் வாயால் உண்மையை எடுக்க வீடியோ ரெக்கார்ட் பண்ணுகின்றார். அங்கு ராணி வரவும் அவருடைய பாணியில் சென்று அவரை கவுக்க முயற்சி பண்ணுகின்றார். ஆனால்  மனோஜ் ஆசையாக பேசியதை அவர்கள் ரெக்கார்ட் பண்ணி, இப்போ எங்கள்ட ஆதாரம் இருக்குது.. இனி நாங்க என்ன கேட்டாலும் நீ செய்யத்தான் வேண்டும் என மனோஜை மடக்குகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்  

Advertisement

Advertisement