தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பினைக் கொண்ட rising star ஒருவர் என்றால் அது அர்ஜுன் தாஸ் தான். "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்" ஆகிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் உயரிய இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அளித்த பேட்டியில், தனது கரியரில் முக்கிய பங்காற்றிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்தும், தனது நடிப்புப் பயணத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் பேட்டியின் போது, "இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனக்கான முகவரியை தந்தவர். எனது சினிமா பயணத்தில் அவர் ஒரு பெரிய திருப்புமுனை. இன்று என்னுடைய பெயர் அறிமுகமாகி இருக்கின்றது என்றால், அதற்குக் காரணம் அவர். லோகேஷ் அழைத்தால் என்ன கதாபாத்திரம், என்ன கதை என்றெல்லாம் கேட்க மாட்டேன். அதேபோல் தயங்காமல் வில்லன் வேடத்திலும் நடித்துக் கொடுப்பேன். அவர் சொல்லும் வேடத்தில் கண்ணை மூடி நடித்துக் கொடுப்பேன்.." என்றார்.
அர்ஜுன் தாஸ், "கைதி" படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். அந்தக் கதாபாத்திரத்தில் அவரது குரலும், கண்களில் தெரிந்த கோபமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பேட்டியினைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் இணைவாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
Listen News!