• Sep 19 2025

கண் அழகி என்று சும்மாவா சொன்னாங்க..!! இன்ஸ்டாவை அலறவைத்த மீனாவின் ஸ்டில்ஸ்..!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய திரைத்துறையில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக கலக்கியவர் மீனா. சிறுவயதில் குழந்தை நடிப்பாளர் (child artist) ஆகவே திரை உலகில் அறிமுகமான அவர், பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.


தனது அழகான முகபாவனைகள், நடிப்பு, ஸ்டைல் என அனைத்திலும் மிகுந்த திறமை கொண்டவர். இந்நிலையில், தற்போது நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


சமீபத்தில், மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர், அழகான பச்சை நிற உடையில், மிகவும் ஸ்டைலிஷாகவும் , அதே நேரத்தில் எளிமையாகவும் தோன்றியுள்ளார். 


படத்தைப் பார்த்த பலரும், “She look's so cute ” என்ற கமெண்ட்ஸினையும் கூறியுள்ளனர். அந்த புகைப்படத்திற்கு இப்போது அதிகளவான லைக்குகள் குவிந்துள்ளன. 


Advertisement

Advertisement